இந்தியாவிலேயே முதல் முறையாக எலெக்ட்ரிக் ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக எலெக்ட்ரிக் ஆட்டோ திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்கட்டமாக 100 எலெக்ட்ரிக் ஆட்டோக்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.1.12 கோடி மதிப்பிலான சொகுசு பேருந்து சேவையையும் முதல்வர் தொடங்கிவைத்துள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 137 வன சரகர்களுக்கு பணி நியமன ஆணையையும் முதல்வர் பழனிசாமி வழங்கியுள்ளார்.

Related Stories:

>