×

சையத் மோடி பேட்மின்டன் காலிறுதியில் இந்திய வீரர்கள்

லக்னோ: சையத் மோடி இன்டர்நேஷல் பேட்மின்டன் போட்டியின் 2வது சுற்றில் சக வீரர்களை வீழ்த்தி இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சவுரப் வர்மா ஆகியோர்  காலிறுதிக்கு முன்னேறினர். லக்னோவில் சையத் மோடி இன்டர்நேஷனல் பேட்மின்டன்  தொடரில் 2வது சுற்றுப் ேபாட்டிகள் நடைபெற்றன. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஒன்றில் இந்தியா வீரர்கள்  கிடாம்பி ஸ்ரீகாந்த்-பாருபள்ளி  காஷ்யப்  மோதினர். அதில் முதல் செட்டை 21-18 என்ற புள்ளி கணக்கில்  காஷ்யப் எளிதில் வென்றார். ஆனால் 2வது  சுற்றை 22-20 என்ற புள்ளி கணக்கில் போராடி வென்ற ஸ்ரீகாந்த், 3வது செட்டை 21-16 என எளிதில் வென்றார். அதனால் ஸ்ரீகாந்த்  காலிறுதிக்கு முன்னேறினார்.

அதேபோல் 2வது சுற்றின் இன்னொரு  போட்டியில் இந்தியாவின்  சவுரப் வர்மா-ஆலப் மிஸ்ரா ஆகியோர் விளையடினர். அதில் சவுரப் 21-11, 21-18 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். தமிழக வீரர் அஜய் ஜெய்ராம் முதல் செட்டை 18-21 என்ற புள்ளி கணக்கில் சீன வீரர் ஜுன் பெங்கிடம் இழந்தார். ஆனால் 2வது செட்டை அசத்தலாக விளையாடி 21-14 என்ற புள்ளி கண்க்கில் எளிதில் வென்றார். அதனால் கடைசி செட்டில் அனல் பறந்தது 2 வீரர்களும் மாறி, மாறி புள்ளிகளை குவித்தனர்.  கடுமையாக போராடி 30-38 என்ற கணக்கில் கடைசி செட்டை வென்ற  ஜுன் பெங் ஆட்டத்தையும் கைப்பற்றினார்.

இன்னொரு இந்திய வீரர் லக்‌ஷயா செனை  ெகாரியாவின் சோன் வான் ஹூவும், இந்தியாவின் சாய் பிரனீத்தை தாய்லாந்து வீரர் குன்லவூத் விதித்ஸரனும் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தனர்.   பெண்கள் ஒற்றையர் பிரிவின் இந்திய வீராங்கனைகளுக்கு இடையிலான போட்டியில் ரிதுபாமா தாஸ், தன்வி லாடை 2-0 நேர் செட்களில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். அதேபோல் இந்திய வீராங்கனை ஸ்ருதி முன்தாதா 2-0 என்ற நேர் செட்களில்  பெல்ஜியத்தின் லியான் டானை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

Tags : Syed Modi ,badminton quarterfinals ,quarterfinals ,Badminton , Syed Modi badminton, quarterfinals, indian players
× RELATED பாரிபா ஓபன் டென்னிஸ் காலிறுயில் ஸ்வியாடெக்