×

சையத் முஷ்டாக் அரையிறுதி இன்று தமிழகம் - ராஜஸ்தான் மோதல்

சூரத்: சையத் முஷ்டக் அலி  டி20 கிரிக்கெட் தொடரில் இன்று சூரத்தில் நடைபெறும்  அரையிறுதி போட்டிகளில் தமிழ்நாடு-ராஜஸ்தான், அரியானா-கர்நாடகா அணிகள் மோத உள்ளன. பி பிரிவில் இடம் பெற்றிருந்த  தமிழ்நாடு  6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றிப்பெற்று சூப்பர் லீக் சுற்றுக்குள் முன்னேறியது. அதே பி பிரிவில் இடம் பெற்றிருந்த ராஜஸ்தான் 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்று சூப்பர் லீக் சுற்றில் நுழைந்தது.  சூப்பர் லீக் சுற்றின் பி பிரிவில்   மும்பை, ஜார்கண்ட், பஞ்சாப் அணிகளை வீழ்த்தியும்,  கர்நாடகா அணியிடம் தோற்றும் தமிழ்நாடு அரையிறுதிக்கு முன்னேறியது. சூப்பர் லீக் சுற்றின் ஏ பிரிவில்  பரோடா, மகராஷ்டிரா,  டெல்லி அணிகளை வீழ்த்தியும் பரோடா அணியிடம் தோற்றும் ராஜஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் ேபாட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இரண்டு அணிகளும் இன்று களம் காண உள்ளன.

ஏற்கனவே லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை  39 ரன் வித்தியாத்தில் வீழ்த்தியிருப்பது தமிழ்நாடு அணிக்கு  பலம்.  தினேஷ் கார்த்திக் தலைமையிலான  தமிழ்நாடு அணி தொடர்ந்து சிறப்பாக அசத்தி வருகிறது. வாஷிங்டன் சுந்தர், நடராஜன், விஜய் சங்கம், சாய் கிஷோர், ஹரி நிஷாந்த், ஷாருக்கான்  என பலரும் நன்றாக விளையாடுகின்றனர். அதேபோல்  ராஜஸ்தான் அணியின் அங்கித் லம்பா, ராஜேஷ் பிஷ்னாய், அங்கேத் சவுத்ரி, கலீல் அகமது, தீபக் சாஹர் ஆகியோர் தொடர்ந்து கலக்கி வருகிறன்றனர். அதனால் இன்று கூடுதல் வேகம் காட்டும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இன்று நடைபெறும் இன்னொரு அரையிறுதிப் போட்டியில்  நடப்பு சாம்பியன் கர்நாடகா-அரியானா அணிகள் மோதுகின்றன.

Tags : semifinals ,Syed Mushtaq ,clash ,Rajasthan , Syed Mushtaq semi-final, Tamil Nadu, Rajasthan
× RELATED நடப்புத் தொடரில் முதல் மோதல்: கொல்கத்தாவை சமாளிக்குமா பஞ்சாப்