×

விளையாட்டு துளிகள்

மீண்டும் மிர்சா
இந்திய டென்னிஸ் புயல் சானியா மிர்சா(33)   2017ம் ஆண்டு நடைபெற்ற சீன ஓபன் போட்டிக்கு பிறகு ஓய்வில் இருந்தார்.  இந்நிலையில் 2020 ஜனவரியில் நடைபெறும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மீண்டும்  களம் இறங்குகிறார் சனியா. தொடர்ந்து ஆஸ்திரேலியா ஓபனிலும் விளையாடுகிறார்.  அதற்காக தீவிர பயிற்சியில் உள்ள சானியா  அமெரிக்கா வாழ் இந்தியர் ராஜீவ்  ராமுடன் இணைந்து கலப்பு இரட்டையர் போட்டிகளில் விளையாடுவார்.

மீண்டு வருவார் டோனி
டெல்லியில்  செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன், ‘தனது தேர்வை  நியாயப்படுத்தும் வகையில் ரிஷப் பண்ட் விளையாட வேண்டும். அந்த இடத்துக்கு  சஞ்சு சாம்சன்  தயாராக இருக்கிறார். இவர்கள் இருவரும் எப்படி விளையாடுகிறார்கள் என்று டோனி  கவனித்துக் கொண்டு இருக்கிறார். அவர் ஐபிஎல் தொடரில் தன்னை நிரூபித்து  விட்டு டி20 உலக கோப்பைக்கு முன்பு அணிக்கு திரும்பக் கூடும்’ என்றார்.

வங்கதேச வீரருக்கு அபராதம்
வங்கதேச கிரிக்கெட் வீரர் சாயிப்  ஹசன். இவர் இந்தியாவுடனான கிரிக்கெட்  போட்டி முடிந்ததும் விமானத்தை தவற  விட்டதால் கொல்கத்தாவில் தங்கினார். அதன்பிறகு நேற்று முன்தினம் டாக்கா  புறப்பட்ட போதுதான் கொல்கத்தா விமானநிலையத்தில்,  அவரது விசா காலம் 2  நாட்களுக்கு முன்பே முடிந்து விட்டது தெரிந்தது. அது தெரியாமல் இந்தியாவில்  தங்கியதற்காக அவருக்கு  ரூ.21,600 அபராதம் விதிக்கப்பட்டது.

இன்று 2வது டெஸ்ட்
ஐசிசி சாம்பியன் டெஸ்ட் தொடரில்  ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் மோதும்  2வது டெஸ்ட் போட்டி இன்று  அடிலெய்டில்  தொடங்குகிறது. முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 5 ரன் வித்தியாசத்தில்  வெற்றிப் பெற்ற ஆஸ்திரேலியா அணி எந்த மாற்றமும் செய்யாமல் களம் காண உள்ளது. அதேபோல் நியூசிலாந்து-இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட்  போட்டியும் ஹாமில்டன்னில் இன்று ஆரம்பமாகிறது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து 65 ரன் வித்தியாசத்தில் வென்றது.

ஆப்கான் 19ரன் முன்னிலை
லக்னோவில் ஆப்கானிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ெடஸ்ட் போட்டி நடக்கிறது.  முதல் இன்னிங்சில் ஆப்கான் 187 ரன், வெஸ்ட் இண்டீஸ் 277 ரன் எடுத்தன.  தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடிய ஆப்கான் நேற்று 2வது நாள் முடிவில் 7 விக்கெட்  இழப்புக்கு 109 ரன் எடுத்தது. இந்நிலையில் 3வது நாளான இன்று ஆப்கான்   2வது இன்னிங்சில்  19 ரன் முன்னிலையுடன் விளையாட உள்ளது.

விரைவில் டி20 உலககோப்பை அணி
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத். ‘ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலககோப்பைக்கான  இந்திய அணியை தேர்வு செய்வதற்கான சோதனைகள் போட்டிகள் மூலம் நடைபெறுகின்றன. ஐபிஎல் போட்டிக்கு பிறகு முழு அணியும் உறுதி செய்யப்படும். அணியின் 4வது இடத்துக்கு யார் என்ற தொடர் கேள்விக்கு ஸ்ரேயாஸ் அய்யர் பதிலாக இருப்பார் என்று தனது ஆட்டங்களின் மூலம் நிரூபித்து வருகிறார்’ என்று சொல்லியுள்ளார்.

Tags : tennis storm ,Indian ,Sania Mirza , Indian tennis , Sania Mirza
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்