×

கோவை மாநகராட்சியில் நேர்காணல் துப்புரவு தொழிலாளர் வேலைக்கு திரண்ட இன்ஜினியர்கள்: அதிகாரிகள் கடும் அதிர்ச்சி

கோவை: கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள 549 துப்புரவு தொழிலாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆள் எடுக்கும் பணி நடக்கிறது. தமிழ் எழுதப்படிக்க தெரிந்தால் போதும் என மட்டும் கல்வித்தகுதி குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு 7  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி மாநகராட்சியில் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.இரண்டாவது நாளாக நேற்று மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நேர்காணல் நடந்தது. 2  நாட்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். அதில் 100க்கும் மேற்பட்ட  பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., பி.எட்.  படித்த பட்டதாரி இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நேர்காணல் நிகழ்ச்சி 29ம் தேதி (இன்றுடன்) முடிகிறது.


Tags : Interview Cleaning Workers ,Coimbatore Corporation The Sanitation Workforce ,Coimbatore Corporate Engineers ,Government , Coimbatore ,Corporation, sanitation ,workforce, authorities
× RELATED துப்புரவு பணியாளர்களுக்கான...