×

கர்நாடகாவில் ‘ஹனிடிராப்’ மோசடி 5 எம்எல்ஏ.க்கள், எம்எல்சி, அரசு அதிகாரிகளிடம் பல கோடி பறிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் எம்.எல்.ஏக்கள்  மற்றும் அரசு அதிகாரிகளிடம் ஹனிடிராப் முறையில் மிரட்டி பல கோடி ரூபாயை  வாங்கிய பெண்கள் உள்பட 10 பேரை சி.சி.பி போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம்,  ஹாசனை சேர்ந்த பாஜ சட்டமேலவை உறுப்பினர் ஒருவரை  ஹனிடிராப் கும்பல் தொடர்பு  கொண்டது. முதலில் அவரிடம் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்ட அந்த கும்பல்,  பின்னர் எம்.எல்.சியை நேரில் சந்தித்து பேசவேண்டுமென்று கூறியுள்ளனர்.  இதற்கு எம்.எல்.சி ஒப்புக்கொண்டதும், தனியார் ஓட்டலில் சந்தித்த கும்பல்,  இளம் பெண்களை அவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அந்த பெண்கள்  எம்.எல்.சியை தங்கள் வலையில் விழ வைத்து, உல்லாசத்திற்கு வரும்படி அழைப்பு  விடுத்துள்ளனர். இவரும் 5  நட்சத்திர ஓட்டலில் அறை புக் செய்து, இளம் பெண்களுடன் தனிமையில்  இருந்துள்ளார்.

இதை அந்த பெண்ணுடன் வந்த கும்பலை சேர்ந்தவர்கள்  ரகசியமாக படம் பிடித்துள்ளனர். ஒரு மாதம் கழித்து, ரூ.25  கோடி கோடி பணம் கொடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வீடியோவை வெளியிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.  இதற்கு பயந்த அவர்  ரூ.15 கோடி கொடுத்துள்ளார்.  இது குறித்து எம்எல்சி உள்துறை  அமைச்சர் பசவராஜ் பொம்மையை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.  அவர் உடனே மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் சந்தீப் பாட்டீலை அழைத்து,  ஹனிடிராப் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

தனிப்படை  அமைத்த சந்தீப் பாட்டீல் விசாரணை நடத்தியதில், தாவணகெரேவை சேர்ந்த முக்கிய  பிரமுகர் ஒருவரின் பெயர், இதில் அடிப்பட்டது.
அவரை மடக்கிய பிடித்த  போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் தாவணகெரேவை சேர்ந்த ராகவேந்திரா  என்று தெரியவந்தது.
இவர் கொடுத்த தகவலின்படி கல்பனா உள்பட 2 பெண்கள், ராகேஷ், மஞ்சுநாத் உள்பட 10 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். இவர்கள் இதுவரை 5 எம்எல்ஏ.க்கள், எம்எல்சி.க்கள், அரசு அதிகாரிகளிடம் பல கோடி மதிப்பில் பணத்தை பறித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணாடியில் ரகசிய கேமரா

ஹனிடிராபில்  ஈடுபடும் பெண்கள், யாருக்கும் சந்தேகம் வராதபடி தனது கண்ணாடியில் ரகசிய  கேமராக்களை பொருத்தியுள்ளனர். அதை படுக்கைக்கு நேராக வைத்துவிட்டு, படம்  பிடித்துள்ளனர். பின்னர் அந்த கேமராவை தலைவனான ராகவேந்திராவிடம் கொடுத்து,  கம்ப்யூட்டர் மூலம் சி.டியாக மாற்றியுள்ளனர்.

Tags : Karnataka ,government officials ,MLC , 5 MLAs, MLC, government officials, Karnataka scam
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!