வளைகாப்பு விழா திட்டம் 1912ல் துவக்கினார் ஜெயலலிதா : ஓபிஎஸ் பேச்சால் அதிர்ச்சி

தேனி. : தேனியில் நடந்த விழாவில் பங்கேற்ற துணைமுதல்வர் ஓபிஎஸ், வளைகாப்பு விழா திட்டத்தை 1912ல் ஜெயலலிதா துவக்கியதாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. தேனியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது, ‘‘சமுதாய வளைகாப்பு திட்டமானது ஜெயலலிதாவால் 1912-13ல்  துவங்கப்பட்டு இன்று வரை சிறப்பாக நடந்து வருகிறது’’’ என்றார். சமுதாய வளைகாப்பு திட்டம் 2012-13ல் துவங்கப்பட்டது. அதை 1912-13 என ஓ.பன்னீர்செல்வம் கூறியதால் அதிமுகவினர், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Related Stories:

>