ஓடும் பஸ்சில் டிவி நடிகையை பலாத்காரம் செய்ய முயற்சி : வாலிபர் கைது

திருவனந்தபுரம்: மலப்புரம் அருகே ஓடும் பஸ்சில் நள்ளிரவில் டிவி நடிகையை  பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். கொல்லத்தை சேர்ந்த இளம் பெண் தனியார் மலையாள டிவி  நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர்  காசர்கோட்டில் நடக்கும் மாநில அளவிலான பள்ளி கலை விழாவில் கலந்துகொள்ள  கொல்லத்தில் இருந்து ஒரு தனியார் ஸ்லீப்பர் கோச் பஸ்சில் ெசன்றார்.  நேற்று அதிகாலை 2 மணியளவில் அவர் அயர்ந்து தூங்கி கெண்டிருந்தபோது, பக்கத்து  பெர்த்தில் படுத்திருந்த ஒரு வாலிபர் இவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.  திடுக்கிட்டு எழுந்த அவர் கூக்குரலிட்டார். சக பயணிகள் எழுந்து கேட்டது  நடந்ததை கூறினார்.

அப்போது  பஸ் மலப்புரம் அருகே உள்ள கோட்டக்கல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.  இதையடுத்து பஸ் கோட்டக்கல் போலீஸ் நிலையம் கொண்ட செல்லப்பட்டது. போலீசார்  வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவர் காசர்கோட்டை சேர்ந்த முனவர்(23)  என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : TV actress ,youth arrest ,Rape TV actress , Youth arrested ,trying to rape, TV actress
× RELATED கணவருடன் தகராறில் விபரீதம் டி.வி. நடிகை தற்கொலை முயற்சி