×

சிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்? : மத்திய அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: சிபிஎஸ்சி தேர்வு கட்டண உயர்வு தொடர்பாக மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்தார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்,  மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் கூறியதாவது: யாருக்கும் லாபம், நட்டம் இல்லை என்ற கொள்கையின் அடிப்படையில் வரும் 2020ம்  ஆண்டு முதல் சிபிஎஸ்இ தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு  முடிவுகள் வெளியிடுதல், தேர்வு நடவடிக்கைகளை கண்காணித்தல், மதிப்பெண்  சான்றிதழ்கள், மறுமதிப்பீடு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அதிக செலவு  ஏற்படுவதால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான (சிபிஎஸ்இ) அதன் தேர்வு  கட்டணத்தை 750ல் இருந்து 1,200 ஆக உயர்த்தி உள்ளது.

10  மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் இருமடங்காக  உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது டெல்லியை தவிர, நாடு முழுவதும்,  தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட அனைத்து  பிரிவினரும் இதுவரை 5 பாடங்களுக்கு செலுத்திய 750 தேர்வு கட்டணம்  தற்போது 1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் செயல்படும்  1,299 பள்ளிகளில் மட்டும் அனைத்து பிரிவை சேர்ந்த 10 வகுப்பு மாணவர்களும்  தேர்வு கட்டணமாக இதுவரை 375 செலுத்தி வந்த நிலையில், தற்போது அது 1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல, 12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணம் 600ல் இருந்து 1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ ஒரு சுயநிதி, சுயசார்பு அமைப்பு என்பதால் மத்திய அரசிடமோ அல்லது அதன் அமைப்புகளிடம் இருந்தோ அதன் செலவினங்களுக்காக நிதி பெறுவது இல்லை. இவ்வாறு அவரது பதிலில் கூறப்பட்டுள்ளது.

Tags : CBSE ,Union Minister , CBSE raise , exam fee, Union Minister's description
× RELATED வரும் கல்வியாண்டில் 3 முதல் 6ம்...