×

உடைந்து நோயாளிகள் உடலுக்குள் செல்லும் ஊசிகளின் தரத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் : அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஊசிகள் உடைந்து உடலில் தங்கிய நிலையில் ஊசிகளின் தரத்தை மறுஆய்வு செய்ய தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. கோவை மாவட்டம்,  மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு செவிலியர்  ஊசிபோட்டபோது, அதன் ஒரு பகுதி உடைந்து குழந்தையின் தொடையில் சிக்கியது. 18 நாட்களுக்குப் பிறகே ஊசி வெளியே எடுக்கப்பட்டது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசவத்தின்போது கவனக்குறைவாக பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஊசி உடைந்து நோயாளியின் உடலில் தங்கும் சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறும் நிலையில், ஊசிகளின் தரம் தொடர்பாக சந்தேகம்  எழுந்துள்ளது. இதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அரசு மருத்துவமனைகளில் விநியோகிக்கப்படும் ஊசிகளை ஆய்வுக்குட்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘நாட்டிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவமனைகளில் அதிநவீன மருத்துவ வசதிகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் ஊசி உடையும் சம்பவங்களால் ஊசிகளின் தரம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : patient , Patients should review , quality , needles going into the body
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...