×

தனி நபர்கள் 3 லட்சம் வரை சீட்டு பிடிக்கலாம் : மசோதா நிறைவேறியது

புதுடெல்லி: சிட்பண்ட் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது. தனிநபர் அல்லது 4 நபர்களுக்கு குறைவானவர்கள் நடத்தும் சிட்பண்டில், பண உச்சவரம்பை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தவும், 4 பேருக்கும் அதிகமானோர் அல்லது நிறுவனங்கள் நடத்தும் சிட்பண்டில் பண உச்சவரம்பை ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.18 லட்சமாக உயர்த்தவும் சிட் பண்ட் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதில் போர்மேன் கமிஷன் 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. சிட்பண்டுக்கு அதிக மதிப்பளிக்கும் வகையில் இந்த மசோதாவில் சமூக நிதி, சுழற்சி சேமிப்பு, மற்றும் கடன் நிறுவனம் என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த மசோதா மக்களவையில் கடந்த 20ம் தேதி நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம்  நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் டெல்லி அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலவுரிமை வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.
டெல்லியில் உள்ள 1,731 அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் மக்களுக்கு நிலவுரிமை வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் தோற்கடிக்கப்பட்டன.

Tags : Individuals ,Bill , Individuals can catch , 3 lakhs ,bill passed
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!