×

திருப்பூர் கனரா வங்கியில் ரூ.3.5 கோடி மோசடி வழக்கு: வங்கி மேலாளர் உட்பட 7 பேருக்கு சிறை தண்டனை வழங்கியது சிபிஐ நீதிமன்றம்

திருப்பூர்: திருப்பூர் கனரா வங்கியில் ரூ.3.5 கோடி மோசடி வழக்கில் வங்கி மேலாளர் உட்பட 7 பேருக்கு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2002ல் பனியன் நிறுவன தொழில் அதிபர் பாண்டியராஜ் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து ரூ. 3.5 கோடி கடன் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. வங்கி முதன்மை மேலாளர் சங்கரதகுமார், தொழில் அதிபர் பாண்டியராஜ், அவரது மனைவி அனித்ரா உட்பட 7 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சாமளாபுரத்தில் செயல்பட்டு வரும் கனரா வங்கியில் கடந்த 4 வருடங்களுக்கு முன் விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கிய இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது என்பது புகாராகும்.

ரூ.80,000 மதிப்புடைய விசைத்தறி இயந்திரங்கள் வழங்குவதாக கூறி அதில் பாதி மதிப்பிலானவற்றை 100 பேருக்கு கொடுத்துள்ளனர் என்பது வங்கி மேலாளர் மீதான குற்றச்சாட்டு. இக்கடன் பெற்றவர்களில், ஒருசிலரை தவிர, பலரும் முறைகேடாக, குறியீட்டை விட, குறைந்த விலையில் இயந்திரங்கள் வாங்கி, மோசடி செய்ததாகவும், மேலாளர், அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து, வங்கி ஊழியர்களிடம் CBI அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலாளர் ராமச்சந்திரன், ஏற்கனவே பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், வங்கி மேலாளர் ராமச்சந்திரன், தரகர்கள் பரமசிவம், செல்வம் விநியோகஸ்தர்கள் கந்தசாமி, அங்கீஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : CBI ,canara bank ,bank manager ,Tirupur ,persons ,Tirupur Kanara Bank ,court , Tirupur, Canara Bank, Fraud, Banyan Industry, Jail, CBI Court
× RELATED திருச்சி துவாக்குடி கனரா வங்கியில்...