×

10 சதவீதத்திற்குள் மட்டுமே Ola,Uber நிறுவனங்களுக்கு கமிஷன்: புதிய விதி வகுக்க மத்திய அரசு திட்டம்

டெல்லி: வாடகை கார்களில் பயணிப்பவர்கள் செலுத்தும் கட்டணத்தில் Ola, Uber நிறுவனங்களின் கமிஷன் அளவு 20 சதவீதமாக  உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு உருவாக்கவுள்ள புதிய விதிகளின் படி, வாடகை கார்களில் பயணிப்பவர்கள் செலுத்தும்  கட்டணத்தில் 10 சதவீதத்திற்குள் மட்டுமே Ola, Uber நிறுவனங்கள் கமிஷன் பெற இயலும்.
பீக் அவர் நேரங்களில் தற்போது வழக்கமான கட்டணத்தை விட 4 முதல் 5 மடங்கு வரை கூட ஓலா, உபேர் நிறுவனங்கள்  வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது.

புதிய விதிகளின் படி, அதிகபட்சமாக அடிப்படை கட்டணத்தில் இருந்து இரு மடங்கு மட்டுமே வசூலிக்கும் வகையில்  விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ஒரு ஓட்டுநர் ஒரு நாளைக்கு புக் செய்யும் டிரிப்புகளில் பத்து  சதவீத டிரிப்புகளுக்கு மட்டுமே பீக் அவர் கட்டணம் வசூலிக்க இயலும். ஓட்டுநர்கள் வாடிக்கையாளர்களின் புக்கிங்கை  தன்னிச்சையாக கேன்சல் செய்தால், அதிகபட்சமாக ரூ.100 வரை Ola, Uber நிறுவனங்களின் அபராதம் வசூலித்துக்  கொள்ளலாம்.

குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் புக்கிங்கை கேன்சல் செய்தால் 2 நாட்களுக்கு அந்த ஓட்டுநருக்கு புக்கிங் கொடுப்பதை  ஓலா, உபேர் நிறுத்தி வைக்க முடியும். இதனைபோல், ஓலா, உபேர் ஆப்கள் மூலமாக வாகனங்கள் புக் செய்யும்  வாடிக்கையாளர்கள் அதனை பாதியிலேயே கேன்சல் செய்தால், தற்போது, ரூ.50 வரை அவர்களிடம் இருந்து கட்டணம்  வசூலிக்கப்படுகிறது. புதிய விதிகளின் படி இந்த கட்டணம் ரூ.100 வரை உயர்த்தப்படும். 3 மணி நேரத்திற்கு ஒரு முறை பயோமெட்ரிக்ஸ் அல்லது ஃபேசியல் ரெகக்னிசன் முறையில் ஓட்டுநரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது. பயணிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு போன்ற விதிகளும் கட்டாயமாக்கப்பட உள்ளது. மேலும், மாநில அரசுகள் விரும்பினால் ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு மேல் வரி விதிக்கலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.


Tags : commission ,companies ,Ola ,Uber ,government , Only 10% commission for Ola and Uber companies: Federal government to set new rule
× RELATED கூடுதல் வாக்கு செய்தி முற்றிலும்...