இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமையில் டெல்லியில் ஆர்ப்பாட்டம்

டெல்லி: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமையில் டெல்லியில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 2 நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் தெரிவித்து தெரிவித்து வந்த நிலையில் இன்று  மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமையில் டெல்லியில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இது குறித்து வைகோ கூறியதாவது: கோத்தபய ராஜபக்சே ஆட்சி பொறுப்புக்கு வந்த வுடன், எனக்கு சிங்களவர்கள் ஓட்டுப்போட்டு தான் ஆட்சிக்கு வந்தேன் என்று பகிரங்கமாக தெரிவித்தார். அது மட்டுமல்ல, துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் யாழ்ப்பானை முதலிய சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழர் துயர், தமிழர் களம் என்ற பத்திக்கை நிறுவனங்கள் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு மூடப்பட்டுள்ளன. லைட் ஹவுஸ் என்ற பெரிய பத்திரிகை நிறுவனம் உள்ளது, அதில் ஆங்கிலம், சிங்களம், தமிழ் என்ற சார்புடைய பத்திரிக்கை நிறுவனமாகும். இவை அனைத்தையும் இலங்கையில் மிரட்டப்பட்டு மூட வைத்திருக்கின்றனர். இவ்வளவு கொடுமைகளை செய்துவிட்டு, இதயத்தில் எங்கள் ரத்தம் மிளிரும் முன்பாக நரேந்திர மோடி அரசு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை இலங்கைக்கு அனுப்பி கொலைகார கொடியவன் ராஜபக்சே-வின் சகோதரன் கோத்தபய ராஜபக்சே-விடம் அழைப்பு கொடுத்து நட்பு பாராட்டுகிறார்.

கோத்தபய ராஜபக்சே, ரத்தவெறிப்பிடித்தவர்களில் மிக கொடியவன் என தெரிவித்தார். மேலும், எங்கள் தமிழின மக்களை கொள்கின்றனர், பெண்களை கற்பழிக்கின்றனர், குழந்தைகளை சித்திரவதை கொலை செய்கின்றனர், மீன்வர்களை பிடித்து கைது செய்து சிறையில் அடைக்கின்ற அந்த கொடியவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்கிறது. தமிழர்களை மத்திய அரசு ஏளனமாக நினைக்கிறது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தீக்குளித்து இறந்து இருக்கிறார்கள், லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள், இந்த கொடூர செயல்களை செய்த கோத்தபய ராஜபக்சே இந்தியாவிற்குள் நுழைய கூடாது என்ற முழக்கத்துடன் வைகோ கண்டனம் தெரிவித்தார்.

Related Stories:

>