×

கோட்சேவை தேசபக்தர் என பேசிய விவாகரம்: பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து சாத்வி பிரக்யாவை நீக்கி பாஜக நடவடிக்கை

புதுடெல்லி: கோட்சேவை தேசபக்தர் என பேசியதையடுத்து பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து சாத்வி பிரக்யாவை நீக்கி பாஜக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மக்களவையில் சிறப்புப் பாதுகாப்புப் படைச் சட்டத் திருத்தம் குறித்த விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் திமுக எம்பி ஆ.ராசா பேசினார். அப்போது அவர் காந்தியை கொலை செய்ததற்கு கோட்சே தெரிவித்த காரணத்தை சுட்டிக் காட்டினார். அதில், காந்தியை கொலை செய்த கோட்சே 32 ஆண்டுகளாக காந்தி மீது வஞ்சம் கொண்டிருந்தேன். அதன்பிறகு தான் காந்தியை திட்டமிட்டு கொலை செய்தேன். ஏனென்றால் காந்தி ஒரு சார்பு கொள்கையுடவர் என நினைத்தேன் எனக் கூறியிருந்தார் எனத் தெரிவித்தார். அந்த நேரத்தில் ஆ.ராசாவின் பேச்சுக்கு குறுக்கிட்டு பேசிய மத்திய பிரதேச மாநில பாஜக சர்ச்சை எம்பி பிரக்யா சிங் தாகூர், இந்த விவாதத்தில் தேச பக்தரை குறிப்பிடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

பிரக்யா சிங் தாகூர் காந்தியை கொலை செய்த கோட்சேவை தேசபக்தர் என்று மீண்டும் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு கோட்சே ஒரு தேசபக்தர் என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இவ்விகாரம் குறித்து பேசிய பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, நடப்பு நாடாளுமன்ற பாஜக குழு கூட்டங்களிலும் சாத்வி பிரக்யாசிங் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கோட்சே குறித்த பிரக்யா தாக்கூரின் சர்ச்சைப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள் ஜே.பி.நட்டா, சாத்வி பிரக்யா சிங் கருத்தை பாஜக கண்டித்துள்ளதாகவும், இத்தகைய சித்தாந்தத்தை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது எனவும் கூறியுள்ளார். இதற்கிடையில், சாத்வி பிரக்யாவின் பேச்சுக்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Tags : Godseye ,BJP ,Sadhvi Pragya ,Parliamentary Standing Committee on Security ,Godsevere ,committee , Gotse, Patriot, Standing Committee of Parliament, Sadhvi Pragya, BJP, JP Natta
× RELATED ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி...