×

பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்திலும் சாத்வி பிரக்யா அனுமதிக்கப்பட மாட்டார் : பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு

டெல்லி : பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து எம். பி. சாத்வி பிரக்யா நீக்கம்
செய்யப்பட்டார். மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசப்பக்தர் என்று பேசிய பிரக்யாவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவையில் சாத்வி பிரக்யா பேசியதில் பாஜகவுக்கு உடன்பாடில்லை என்றும் கண்டனத்திற்கு உரியது என்று கூறிய பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்திலும் சாத்வி பிரக்யா அனுமதிக்கப்பட மாட்டார் என்று கூறியுள்ளார். 


Tags : Sadhvi Pragya ,BJP ,session ,JP Natta , Standing, MS. B. Sadhvi Pragya, Dismissal, Gotze, Patriot, Lok Sabha, Government, JP Natta
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...