×

சென்னகேசவ பெருமாள் கோயில் இடத்தில் இயங்கும் கடைகளில் 1.32 கோடி வாடகை வசூல் : தவறியவர்களுக்கு 2 மாதம் அவகாசம்

தண்டையார்பேட்டை: சென்னமல்லீஸ்வரர் சென்னகேசவ பெருமாள் கோயில் இடத்தில் கடை வைத்திருப்பவர்கள் வாடகை செலுத்த வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை கூறியிருந்தது. அதன்படி இதுவரை 1.32 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு 2 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பூக்கடை தேவராஜ முதலித்தெருவில் சென்னமல்லீஸ்வரர் சென்னகேசவ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக கொத்தவால்சாவடி வரதாமுத்தியப்பன் தெருவில்  144 கடைகள் உள்ளன. இங்கு கடை நடத்துபவர்கள் பல ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்துள்ளனர். எனவே வாடகை வசூல் செய்யாமல் ₹3.24 கோடி பாக்கி இருப்பதாகவும்  இந்து சமய அறநிலைத்துறை வாடகை பாக்கியை உடனே வசூலிக்கும் படி அறிவுறுத்தியது.
இதுகுறித்து கோயில் மேலாளர் ஜெயராமன் வாடகைதாரர் 144 பேருக்கும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாடகை செலுத்தவில்லையெனில் கடையை காலி செய்யும்படி நோட்டீஸ் கொடுத்து இருந்தார்.

இதையடுத்து 1.32 கோடி வாடகை வசூல் செய்யப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு 2 மாதங்கள்  அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் வாடகைதாரர்கள் வாடகை கட்டவில்லை எனில் கடையை காலி செய்து விடுவதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் 7 கடைக்காரர்கள் காலி செய்ய மாட்டேன் என்று கூறி உள்ளனர். இதனால் அந்த கடைகளுக்கு வரும் 30ம் தேதி போலீஸ் உதவியுடன் சீல் வைக்க உள்ளதாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். கடைக்காரர்கள் 7 பேர் காலி செய்ய மறுத்துள்ளதால் அந்த கடைகளுக்கு வரும் 30ம் தேதி போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட உள்ளது.



Tags : stores ,Chennakesava Perumal ,Chennakesava Perumal Temple , Chennakesava Perumal, temple , missing
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...