அண்ணன் - தங்கை பாசத்தில் சிக்கிய மைக்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடந்த எம்எல்ஏ.க்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த கட்சித் தலைவர்கள், எம்எல்ஏ.க்களை சரத் பவாரின் மகளும், எம்பி.யுமான சுப்ரியா சுலே வரவேற்று கொண்டிருந்தார். அப்போது, விழாவில் பங்கேற்க தேசியவாத காங்கிரசில் இருந்து தற்காலிகமாக பிரிந்து சென்றவரும் முன்னாள் துணை முதல்வருமான அஜித் பவார் வந்தார். அவர் சற்றும் எதிர்பாராத விதமாக, தனது தங்கை சுப்ரியா சுலேவை கட்டித் தழுவினார். அப்போது, அவரிடம் பேட்டி எடுக்க முயன்ற நிருபரின் மைக் இருவர் இடையே சிக்கி கொண்டது. ஆரம்பத்தில் மைக்கையும் கையையும் விடுவிக்க முடியாமல் திணறிய நிருபர் ஒரு வழியாக சுதாரித்து கொண்டு கையை எடுத்த பின்னர் மைக்கை கீழே விட்டு விட்டார். அதன் பிறகு அண்ணன் அஜித் பவாரும், தங்கை சுப்ரியா சுலேவும் பிரிந்த பின்னர் மைக்கை எடுத்து கொண்டார். இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: