×

கோட்சே `தேசபக்தர்’ பிரக்யா சர்ச்சை பேச்சு

மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தின் போது தலைவர்களுக்கான சிறப்பு பாதுகாப்பை (எஸ்பிஜி) திரும்ப பெற்றது குறித்து பேசிய திமுக எம்பி ஆ. ராசா, `காந்தியை கொன்றது ஏன்?’ என்பது பற்றி கோட்சே கூறியதை மேற்கோள் காட்டி பேசினார். அப்போது குறுக்கிட்ட பாஜ சர்ச்சை எம்பி பிரக்யா தாக்கூர், `தேசபக்தரை முன்னுதாரணமாக கூறக் கூடாது’ என்று தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜ எம்பி.க்களும் அவரை இடைமறித்து அமரும்படி கூறினர். பின்னர் தொடர்ந்து பேசிய ஆ.ராசா, `தலைவர்களுக்கான எஸ்பிஜி பாதுகாப்பு என்பது அச்சுறுத்தலின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, கட்சி ரீதியிலானதாக இருக்கக் கூடாது. எனவே, பிரதமர் தவிர, பிற தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை ரத்து செய்தது பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’ என்று கேட்டு கொண்டார்.6.83 லட்சம் காலியிடங்கள்மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திரா சிங் நேற்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட இடங்கள் 38,02,779. இதில் கடந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி வரையிலான காலத்தில் 31,18,956 பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. தற்போது 6.83 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்களுக்கு ஏற்ப பணியாளர்களை தேர்வு செய்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

பல்வேறு துறைகளால் அறிவிக்கப்படும் காலியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வரும் நிலையில் புதிதாக சில காலியிடங்கள் உருவாகின்றன. தற்போது மத்திய பணியாளர் தேர்வாணையம் 2019-20ம் ஆண்டுக்கான காலியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள 1,05,338 பணியிடங்களை நிரப்புவதற்கான பணியை தொடங்கியுள்ளது. மேலும், 4,08,591 பணியிடங்களை நிரப்பும் பணியில் இந்த ஆணையம் ஏற்கனவே ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் 17ம் தேதி, மத்திய அரசு வரிகள் மற்றும் மாநில அரசு வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு மற்றும் சேவை வரியை ஜிஎஸ்டி என்ற பெயரில் ஒரே வரியாக அமல்படுத்தியது.  ஜிஎஸ்டிக்கு முந்தைய வரி விதிப்பால் மாநிலங்களுக்கு இழப்பு ஏற்பட்டால், ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின் 5 ஆண்டுகளுக்கு சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப் சிங் பாஜ்வா, பூஜ்ய நேரத்தில் ஜிஎஸ்டி நிவாரணத் தொகை மாநிலங்களுக்கு தாமதமாக கிடைப்பதாக குற்றம்சாட்டி பேசினார். அப்போது `தொடக்கத்தில் மாதம் தோறும் கிடைத்த ஜிஎஸ்டி இழப்பீடு தொகை பின்னர் 2 மாதங்களுக்கு ஒருமுறை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்கான இழப்பீடு தொகை நிலுவையில் உள்ளது. பஞ்சாப் மாநிலம் ₹2100 கோடியை இழப்பீடாக பெற்றுள்ளது. மேலும், நிலுவைத்தொகை உள்பட மொத்தம் ₹4100 கோடி பாக்கி வரவேண்டியுள்ளது. இந்த தொகையை மாநிலங்களுக்கு வழங்காமல் தாமதம் செய்வதால் மாநிலங்களில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதுடன் ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்கமுடிவதில்லை,’’ என்றார்.

2 யூனியன் பிரதேசம் ஒருங்கிணைப்பு
குஜராத் மேற்கு கடலோரப் பகுதியில் 35 கி.மீ. தொலைவு இடைவெளியில் தனித்தனியாக அமைந்துள்ள இரண்டு யூனியன் பிரதேசங்களான டாமன்-டை, தாத்ரா-நாகர்ஹவேலியை ஒன்றாக இணைக்கும் ஒருங்கிணைப்பு மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் சிறந்த நிர்வாகம், பல்வேறு வளர்ச்சி பணிகளை மேம்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஸ்டிரைக்குக்கு நோட்டீஸ் தர வேண்டும்
மாநிலங்களவையில் நேற்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் பேசுகையில், ‘‘தொழிலாளர் சட்டங்களில் மத்திய அரசு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. புதிய தொழிலாளர் சட்டப்படி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டால் அது தொடர்பாக அவர்கள் 14 நாட்களுக்கு முன் நோட்டீஸ் தரவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும், கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் 10 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர். இது, மொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் 20 சதவீதமாகும். எனவே, இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் விவகாரம் குறித்து ஆலோசனை செய்வோம். மேலும், இடம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள் எத்தனை பேர் என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளோம்,’’ என்றார்.

செயில் தனியார்மயமா?
மாநிலங்களவையில் மத்திய உருக்குத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், ‘‘கடந்த 5 ஆண்டுகளில் கச்சா உருக்கு உற்பத்தி திறன் 32 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. கடந்த 2014-15ம் ஆண்டில் உள்நாட்டு கச்சா எக்கு உற்பத்தி திறன் 109.85 மில்லியன் டன்களாக இருந்தது. இது, கடந்த 2018-19ம் ஆண்டில் 142.24 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 28 மில்லியன் டன்களாக கச்சா உருக்கு உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் முதல் உருக்கு தேவை அதிகரித்துள்ளதால் இந்த துறையில் கூடுதல் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது,’’ என்றார். தொடர்ந்து, ‘இந்திய உருக்கு ஆணையத்தை (செயில்) தனியார் மயமாக்கும் திட்டம் அரசுக்கு உள்ளதா?’ என துணைக்கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நேரடியான பதில் எதையும் அவர் அளிக்க மறுத்துவிட்டார்.

ஜிஎஸ்டி இழப்பீடு தாமதம்
மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் 17ம் தேதி, மத்திய அரசு வரிகள் மற்றும் மாநில அரசு வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு மற்றும் சேவை வரியை ஜிஎஸ்டி என்ற பெயரில் ஒரே வரியாக அமல்படுத்தியது.  ஜிஎஸ்டிக்கு முந்தைய வரி விதிப்பால் மாநிலங்களுக்கு இழப்பு ஏற்பட்டால், ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பின் 5 ஆண்டுகளுக்கு சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப் சிங் பாஜ்வா, பூஜ்ய நேரத்தில் ஜிஎஸ்டி நிவாரணத் தொகை மாநிலங்களுக்கு தாமதமாக கிடைப்பதாக குற்றம்சாட்டி பேசினார்.

அப்போது `தொடக்கத்தில் மாதம் தோறும் கிடைத்த ஜிஎஸ்டி இழப்பீடு தொகை பின்னர் 2 மாதங்களுக்கு ஒருமுறை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்கான இழப்பீடு தொகை நிலுவையில் உள்ளது. பஞ்சாப் மாநிலம் ₹2100 கோடியை இழப்பீடாக பெற்றுள்ளது. மேலும், நிலுவைத்தொகை உள்பட மொத்தம் ₹4100 கோடி பாக்கி வரவேண்டியுள்ளது. இந்த தொகையை மாநிலங்களுக்கு வழங்காமல் தாமதம் செய்வதால் மாநிலங்களில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதுடன் ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்கமுடிவதில்லை,’’ என்றார்.

Tags : Gotse ,Patriot 'Pragya ,Kotche ,Patriot Pragya , Kotche, `Patriot, Pragya controversy ,
× RELATED கோட்சே முதல் பவன் குப்தா வரை; இந்திய...