×

ஏர் இந்தியா 36,00 கோடி நஷ்டத்தில் இயங்கிறது: தனியார் மயம் இல்லையானால் மூடப்படும்...மத்தியமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்

டெல்லி: பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், ந‌‌ஷ்டத்தில் இருந்து வருகிறது. கடந்த 2018-19 நிதி ஆண்டில் இந்த நிறுவனம், ரூ.7,600 கோடி ந‌‌ஷ்டத்தை சந்தித்து உள்ளது. ஏஐஎஸ்ஏஎம் என்ற அமைப்பு கடந்த மார்ச்  மாதத்தில் கூடிய போது கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் முதலீட்டு குறைப்புக்கு சூழ்நிலை சாதகமாக இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும் இந்த குழுவில் இடம்பெற்றிருந்த அருண் ஜெட்லீயும், சுரேஷ் பிரபுவும்  இப்பொது அமைச்சர்களாக இல்லை. எனவே அவர்களை நீக்கி நிர்மலா சீதாராமன், ஹாதீப்சிங் பூரி ஆகியோருடன் இக்குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிதின் கட்கரி தொடர்ந்து இக்குழுவில் நீடிக்கிறார். ஏர்இந்தியாவை மீட்பதற்காக அரசு  அளித்துவரும் ஆதரவு காரணமாக, நிதி நெருக்கடிக்கு ஆளான ஏர் இந்தியாவில் ஓரளவு நிலைமை சீரடைந்ததாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது. இந்த நிலையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை  பொதுகுழுக்கூட்டம் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் கூடியபோது, ஏர்-இந்தியாவின் முதலீட்டை தனியாருக்கு வழங்கும் முடிவு தொடர்ந்து அப்படியே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த நிறுவன பங்குகளை விற்கும் முயற்சி பலன் அளிக்கவில்லை எனவே புதிய உத்திகளை மத்திய அமைச்சர்கள் குழுவிடம் (ஏஐஎஸ்ஏஎம்) நிதியமைச்சகம் சமர்ப்பித்துள்ளது. அதில், ஏர் இந்தியா நிறுவனத்திடம் தனக்கு உள்ள  பங்குகள் அனைத்தையும் (100 சதவீதம்) அல்லது 76 சதவீதத்தை விற்க முன்வந்துள்ளது. கடந்த ஆண்டு ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை விற்கவும் நிர்வாக மேலாண்மை கட்டுப்பாட்டை மாற்றவும் தயார் என்று மத்திய அரசு அறிவிப்பு  வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த அறிவிப்பு யாரையும் கவரவில்லை என்பதால் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. ஏர் இந்தியாவின் பங்குகளை தனியார் மயமாக்குவதில் எந்த மாற்றமும் இல்லை என  நாடாளுமன்றத்தில் மத்திய அரசு முன்னதாக தகவல் அளித்தது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 36 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிவந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் கடனை அடைக்க, அதன் 76  சதவிகித பங்குகளை கடந்த ஆண்டே விற்க முடிவுசெய்தபோதும் அதை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை என தெரிவித்தார். அதனால் நிர்வாக நலன் கருதி மொத்த பங்குகளையும் தற்போது தனியாருக்கு விற்கவுள்ளதாக தெரிவித்த அவர்,  யாரும் ஏலத்தில் எடுக்காத பட்சத்தில் அந்நிறுவனம் மூடப்படும் என தெரிவித்தார்.

நஷ்டத்தில் இயக்குவதைவிட மூடிவிடுவதே சிறந்தது என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அந்நிறுவன ஊழியர்களுக்கு  பாதிப்பு ஏற்படாத வகையில், நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஏர் இந்தியாவை நாங்கள் தனியார்மயமாக்கவில்லை என்றால், அதை இயக்குவதற்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்? நாம் கருத்தியல் நிலைப்பாடுகளை எடுத்தால் அதை இயக்குவது கடினம் என்றும் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நகர்ப்புறங்களில் 60 லட்சம் தனிநபர் வீட்டு கழிப்பறைகளை கட்ட இலக்கு இருந்தது. இலக்கை எதிர்த்து நாங்கள் ஏற்கனவே 67 லட்சத்திற்கும் அதிகமான கழிப்பறைகளை கட்டியுள்ளோம் என்றார்.


Tags : Air India , Air India is running a loss of Rs 36,00 crore: Private private sector will be shut down if ...
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...