×

சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சிறிய பாகற்காய் விலை எகிறியது: கிலோ ரூ.130க்கு விற்பனை

மதுரை: மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் சிறிய பாகற்காய் விலை உயர்ந்து கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயமும் கிலோ ரூ.120க்கு விற்பனையாகிறது. மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு தேனி, திண்டுக்கல், கொடைக்கானல் ஆகிய பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரியில் காய்கறிகள் வருகின்றன. சென்ட்ரல் மார்க்கெட்டில் இன்று காய்கறிகளின் வரத்து குரைவாகவே இருந்தது. இதனால் விலையும் அதிகமாக இருந்தது.  ெசன்ட்ரல் மார்கெட்டில் இன்றைய விலை (ஒரு கிலோவிற்கு) பின்வருமாறு: கத்திரிக்காய் ரூ.46, தக்காளி ரூ.24, பச்சைமிளாகாய் ரூ.36, பல்லாரி ரூ.60, சின்னவெங்காயம் ரூ.120, உருளைக்கிழங்கு ரூ.36, சேனைக்கிழங்கு ரூ.30, கருணைக்கிழங்கு ரூ.32, சேம்பு ரூ.48, பீன்ஸ் ரூ.42, கேரட் ரூ.30, காளிப்பிளவர் ஒரு பூ ரூ.30, நூக்கல் ரூ.36, டர்னிப் ரூ.15, பட்டர் ரூ.100, சோயாபீன்ஸ் ரூ.100, பச்சைப்பட்டாணி ரூ.90, அவரை ரூ.50, பீட்ரூட் ரூ.20, முள்ளங்கி ரூ.15, வெண்டைக்காய் ரூ.25, சீனிஅவரை ரூ.50, பூசானிக்காய் ரூ.10, முருங்கைகாய் (கிலோ) ரூ.70, முட்டைகோஸ் ரூ.30, பச்சைமொச்சை ரூ.40, சவ்சவ் ரூ.18, கருவேப்பிலை ரூ.20, மல்லி ரூ.70, புதினா ரூ.20,  புதிய இஞ்சி ரூ.75, சிறிய பாகற்காய் ரூ.130

இதில், கடந்த வாரத்தில் இருந்தே பல்லாரி மற்றும் சின்ன வெங்காயம் விலை அதிகரித்து உள்ளது. இது குறித்து சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் முருகன் கூறுகையில், ‘‘கடந்த சில வாரமாக பல்லாரி, சின்ன வெங்காய விலை மிக கடுமையாக உயர்ந்து இருந்தது. தற்போது பல்லாரி கிலோ ரூ.60க்கும், சின்ன வெங்காயம் ரூ.120க்கும் விற்பனையாகிறது. மேலும் மருத்துவ குணம் கொண்ட சிறிய ரக பாகற்காய் கிலோ ரூ.130க்கு விற்பனையில் உள்ளது. கடந்த வாரத்தை விட தற்போது அனைத்து காய்களின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. வரத்து இல்லாததால் வரும் நாட்களில் காய்கறிகளின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.

Tags : Small Onions , Small onion, small turkey, for sale
× RELATED மக்காசோளம் கீரை கடையல்