×

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்கு முதல்வர், 15 அமைச்சர் பதவிகள் ; காங், என்சிபிஐக்கு தலா 1 துணை முதல்வர், 13 அமைச்சர் பதவிகள்...

மும்பை: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சிக்கு 13 அமைச்சர்கள், சபாநாயகர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா: எந்தெந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள்?

*மகாராஷ்டிரா சட்டப்பேரவைக் இன்று காலை 8 மணிக்கு கூட்டம் கூடியது. பாஜவைச் சேர்ந்த இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கோலம்ப்கர், எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவைச் சேர்ந்த 105 எம்எல்ஏக்கள், சிவசேனாவின் 56 எம்எல்ஏக்கள், தேசியவாத காங்கிரசின் 54 எம்எல்ஏக்கள், காங்கிரஸ்  கட்சியைச் சேர்ந்த 44 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 288 எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

*மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்க உள்ளார்.  நாளை (நவ. 28) மாலை 6.40 மணிக்கு பதவியேற்பு விழா நடப்பதாக இன்று அறிவிக்கப்பட்டது. மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெறும் விழாவில், ஆளுநர் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

*நாளை முதல்வராக உத்தவ் தாக்கரே மட்டும் பொறுப்பேற்பார். அமைச்சர்கள் பின்னர் பொறுப்பேற்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை முதலமைச்சர்களாக தேசியவாத காங்கிரசின் ஜெயந்த் பாட்டீல், காங்கிரசின் பாலாசாகேப் தொராட் ஆகியோர் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

*மகாராஷ்டிராவில் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரேவுக்கு முதல்வர் பதவியும், 15 பேருக்கு அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

*தேசியவாத காங்கிரசுக்கு துணை முதல்வர், 13 அமைச்சர்கள் பதவியும், காங்கிரஸ் கட்சிக்கு 13 அமைச்சர்கள், சபாநாயகர் பதவியும் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

*இதனிடையே உத்தவ் தாக்கரே தமக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்தும் கடிதத்தை டிச. 3ம் தேதிக்குள் (நேற்றிலிருந்து 7 நாள்) சமர்ப்பிக்க ஆளுநர் அவகாசம் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் நேற்று திடீர் திருப்பம்


*கடந்த அக். 24ல் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு, அதன்பின் நடந்த சம்பவங்களை தொடர்ந்து, ‘மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பாஜ கட்சியின் தேவேந்திர பட்நவிஸ் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

*திடீர் திருப்பமாக முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் நேற்று மாலை ராஜினாமா செய்தனர். இதன் மூலம் 4 நாள் பாஜ அரசு முடிவுக்கு வந்தது. தொடர்ந்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டுக் கூட்டத்தில், மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு உத்தவ் தாக்கரே அறிவிக்கப்பட்டார்.

*மூன்று கட்சிகளும் தங்கள் கூட்டணிக்கு ‘மகாராஷ்டிர விகாஸ் அகாதி’ என்று பெயரிட்டன. இக்கூட்டத்தில் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், சுவாபிமானி ஷெட்கரி சங்கடனாவின் ராஜு ஷெட்டி, சமாஜ்வாடி கட்சியின் அபு அஸ்மி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, சிவசேனா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே வரும் 1ம் தேதி முதல்வராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

Tags : Chief Minister ,party ,Shiv Sena ,ministers ,deputy chief ministers ,Maharashtra ,deputy chief minister ,NCP ,NCPI ,Maharashtra Kong , Majority, Supreme Court, Legislative Assembly, Patnavis, Maharashtra, Governor, Bhagat Singh Koshyari, BJP, NCP, Shiv Sena, Congress
× RELATED வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துங்கள்: மாயாவதி அழைப்பு