×

அல்பேனியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு

திரானா: அல்பேனியா நாட்டில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறி சாலைகளில் திரண்டனர். இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 6.4 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. தலைநகர் திரானாவில் இருந்து வடமேற்காக 30 கிமீ தொலைவில் 20 கிமீ ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது. இதன் காரணமாக பல இடங்களில் வீடுகள் இடிந்தன. நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. பெரும்பாலான கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர்.

இதனிடையே இடிபாடுகளில் சிக்கி பல்வேறு பகுதிகளில் 16 பேர் இறந்தனர். மேலும், 150 பேர் காயமடைந்தனர் என முதற்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் அதிக பாதிப்புக்குள்ளான அல்பேனியாவின் துர்ரஸ், திரானா, துமானே ஆகிய நகரங்களில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் எடி ரமா தெரிவித்துள்ளார்.


Tags : earthquake ,Albania , Albania, earthquake
× RELATED வேளாண் மாணவர்கள் பார்வையிட்டனர் உலக...