×

பேரன், பேத்திகளுக்காக ரகசியமாய் சேகரித்த ரூ.46,000 நோட்டுகள் செல்லாதா ? : வேதனையில் மூதாட்டிகள்

திருப்பூர் : பேரன், பேத்திகளுக்காக ரகசியமாக சேமித்து வைத்த ரூ. 46,000யும் பணமதிப்பு நீக்கப்பட்ட 500,1000 ரூபாய் நோட்டுகள் எனத் தெரிந்து திருப்பூர் மாவட்ட மூதாட்டிகள் இருவர் அதிர்ச்சி அடைந்தனர்.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பூமலூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கம்மாள், தங்கம்மாள் சகோதரிகள் இருவருக்கும் 75 வயதான நிலையில் கணவர்கள் இல்லை. இருவரும் தத்தம் மகன்களது வீட்டில் வசித்து வருகின்றனர்.  

இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துமனைக்கு அழைத்து சென்று மகன்கள் சிகிச்சை அளித்து வந்திருக்கின்றனர். சிகிச்சைக்குப் போதிய பணம் இல்லாததால் தாயாரிடம் ஏதேனும் பணம் உள்ளதா என கேட்க. தாங்கள் சேமித்து வைத்திருந்த 46,000 ரூபாய் பணத்தை மகன்களிடம் கொடுத்துள்ளனர்.அவை அனைத்தும் பணமதிப்பிழந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் என்பதைக் கண்டு மகன்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்கு வந்த 3 ஆண்டுகள் ஆன நிலையில், அதுபற்றித் தெரியாமல் மூதாட்டிகள் பணம் சேர்த்து வைத்திருந்திருக்கின்றனர். யாருக்கும் தெரியாமல் இத்தனை ஆண்டுகளாய் சிறுக சிறுக சேமித்த பணம் செல்லாது என மகன்கள் கூறியதும் செய்வது அறியாது திகைத்து போயுள்ளனர் மூதாட்டிகள் இருவரும். மேலும் 2015ம் ஆண்டு வரை தாங்கள் வேலைக்கு சென்று வந்த போது, சேர்த்து வைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் இவை எனவும் அவை செல்லாதவை என தங்களுக்கு தெரியாது என்றும் அவர்கள் பரிதாபத்துடன் கூறுகின்றனர்.


Tags : Ancestors ,grandson ,granddaughter , Cash Values, Grandparents, Tirupur, Invalid, Rupees, Notes
× RELATED மூதாதையரில் எத்தனை பேரைத் தெரியும்?