×

இந்தியாவின் கார்ட்டோசாட் 3 மற்றும் அமெரிக்காவின் 13 நானோ வகை செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 47 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் கார்ட்டோசாட் 3 மற்றும் அமெரிக்காவின் 13 நானோ வகை செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 47 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் மூலம் பூமி ஆராய்ச்சிக்காக கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த 13 நானோ செயற்கைக்கோள்களை கடந்த 25ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்த இருந்தது. ஆனால், வானிலை மாற்றத்தால் அன்று விண்ணில் ஏவுவது தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, 27ம் தேதி காலை 9.28 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது. எனவே திட்டமிட்டப்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட்டை இஸ்ரோ இன்று காலை 9.28 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்படது.

ராக்கெட்டை விண்ணில் ஏவுதற்கான 26 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 7.28 மணிக்கு தொடங்கியது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதும் 509 கி.மீட்டர் தொலைவில் அதன் சுற்று வட்டப்பாதையில் கார்டோசாட்-3 செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும். கார்டோசாட்-3 செயற்கைக்கோளில் உள்ள அதிநவீன கேமரா வானில் மேகக்கூட்டங்களை ஊடுருவி புவியை தெளிவாகப் படம் பிடிக்கும் என்பதோடு, இரவு நேரத்திலும் புவியை மிகத் தெளிவாகப் படம்பிடித்து அனுப்பும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். இது 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் எனவும் இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயற்கைக்கோள் பெரிய அளவிலான நகர பயன்பாட்டு திட்டம், கடற்கரையோர நிலங்களின் பயன்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும்.

இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோளுடன் அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த 14 செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளன. இது இஸ்ரோ விண்ணில் ஏவும் 49-ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பதோடு, திறன் கூட்டப்பட்ட 21-ஆவது எக்ஸெல் ரக ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : PSLV ,India ,US ,BSLV , Cartosat, Nano Satellite, BSLV C47 Rocket
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...