×

ஏ டிவிஷன் ஹாக்கி அஞ்சல் துறை வெற்றி

சென்னை: சென்னையில் நடைபெறும் ஏ டிவிஷன் லீக் ஹாக்கிப் போட்டியில் அஞ்சல் துறை வெற்றிப் பெற்றது. எழும்பூர் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் அஞ்சல்துறை- திவாகர் மெமோரியல் அணிகள் மோதின. அதில் ஆரம்பம் முதலே அஞ்சல்துறை அணி ஆதிக்கம் செலுத்தியது. அதனால் முதல்பாதியில் அஞ்சல்துறை அணி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 2வது பாதியிலும் அஞ்சல்துறை அணி வீரர்கள் திவாகர் மெமோரியல் அணியில் கோல் ஏரியாவை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். அதனால் ஆட்டத்தின் முடிவில் 7-0 என்ற கோல் கணக்கில் அஞ்சல்துறை அணி அபாரமாக வெற்றிப் பெற்றது. இன்று நடைபெறும் லீக் போட்டியில் பாரத ஸ்டேட் வங்கி-கனரக தொழிற்சாலை, ஏர்இந்தியா-ஸ்போர்டிங் பிரதர்ஸ், தமிழ்நாடு மின்சார வாரியம்-ஹாக்கி கிளப் அணிகள் விளையாட உள்ளன.

Tags : A. Division ,department ,department wins , A. Division hockey, postal department, success
× RELATED சில்லிபாயின்ட்…