பைக் திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி

சென்னை: கோடம்பாக்கம், காமராஜர் காலனி, 3வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு, நேற்று முன்தினம் இரவு, பைக் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது, அங்கு வந்த 3 வாலிபர்கள், பூட்டை உடைத்து பைக்கை திருட முயன்றனர். திடீரென பைக்கில் இருந்து அலாரம் ஒலித்ததால், அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே ஓடி வந்தனர். இதை பார்த்த திருடர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில், ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இருவர் பைக்குடன் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட திருடனை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

தகவலறிந்த கோடம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் சிக்கியிருந்த திருடனை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், புதுப்பேட்டையை சேர்ந்த கோபால் (19) என்று தெரியவந்தது. அவரை கைது செய்தனர். பைக்குடன் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags : charity ,plaintiff , Bike steal, plaintiff, civilians, charity feet
× RELATED மனநோயாளிகள் காப்பகத்தில் சேர்ப்பு கருணை காட்டிய அட்சயம் அமைப்பினர்