×

மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலந்தால் ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் கலந்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பிலான 14 பேட்டரி குப்பை அள்ளும் வாகனங்களை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று துவக்கி வைத்தார். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் சுற்றுச்சூழலுக்கு மாசில்லா வகையில் இயங்கும் 14 பேட்டரி  குப்பை வாகனங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர் ஆணையர் பிரகாஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:சென்னையில் ஒரு நாளைக்கு திடக்கழிவு 5,000 மெட்ரிக் டன் சேகரிக்கப்படுகிறது. இதில் மறுசுழற்சி செய்யக்கூடிய அளவுகள் அதிகரிக்க புதிய திட்டங்கள் தயாராகி வருகிறது. சென்னை மாநகராட்சியில் இன்னும் ஒரு வருடத்திற்குள் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை முற்றிலும் ஒழிக்கப்படும். மனித கழிவுகளை சுத்தம் செய்வதற்காக விரைவில் 6 அதிநவீன ரோபோடிக் இயந்திரங்கள் வாங்குவோம்.

சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மழைநீர் வடிகால்வாய்களில் கழிவுகளை திறந்து விட்டால் ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் இந்த மாதம் சென்னையில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. நவம்பர் மாதத்தில் இதுவரை 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள பொது கழிப்பறைகள் நிலை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது, என்றார்.

Tags : commissioner , If rainwater is mixed with rainwater, a fine of Rs.
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...