×

மின்வாரிய காலிப்பணியிடங்கள் மு.க.ஸ்டாலினிடம் தொமுச மனு

சென்னை: தொமுச நிர்வாகி சரவணன் உள்ளிட்டோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:  மின்வாரியத்தில் தற்போது சுமார் 47,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் 21,600 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டது. ஆனால் அதன்பிறகு ஆட்சி மாற்றத்தால் கடந்த 2011ல் இருந்து எந்தவொரு ஒப்பந்த தொழிலாளர்களையும் பணிநிரந்தரம் செய்யவில்லை.  திடீரென தமிழக வரலாற்றில் இல்லாத கேங்மேன் என்ற பதவி ஒன்றை உருவாக்கி,  மின்வாரியமும், ஆளும் கட்சியும்  விரும்புவோரை பணியில் சேர்த்திட திட்டம் தீட்டி உள்ளதாக தெரிகிறது. கடந்த திமுக ஆட்சியில்  ஒப்பந்த  தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டார்கள். இதனால் மின்வாரியத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட  ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகும் அவல நிலை  ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : MG Stalin ,MV , Electric vacuums, MG Stalin
× RELATED விஷ வண்டுகள் அழிப்பு