×

மனுதாரரே வாதிட கட்டுப்பாடு நீதித்துறை அறிவிப்பை ரத்து செய்ய வழக்கு

மதுரை: மனுதாரர்களே ஆஜராகி வாதிடுவதை கட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை, ரத்து செய்யக்ேகாரிய மனுக்கள் மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், நெல்லை கூனியூரைச் சேர்ந்த சுந்தரவேல் ஆகியோர், தனித்தனியே ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:பொதுநலன் கருதி சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்காக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளோம். இதில், நாங்களே ஆஜராகி வாதிடுகிறோம்.   இதை கட்டுப்படுத்தும் வகையில் நவ. 4ல் நீதித்துறை சார்பில் ஓர் அறிவிப்பாணை  வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பொதுநலன் சார்ந்த பிரச்னைகளுக்காக, எங்களால் வழக்கு தொடர்ந்து உடனுக்குடன் தீர்வு காண முடியாது.

இது அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். வழக்கறிஞர் கட்டணம் செலுத்த முடியாததால் தான் நாங்களே ஆஜராகி வழக்கில் வாதிடுகிறோம். குறிப்பாக, அரசின் தவறுகளை சுட்டிக்காட்டவும்,  பொதுமக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, எங்களை கட்டுப்படுத்தும் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள்  டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு மனுவையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடுமாறு கூறி விசாரணையை தள்ளி வைத்தனர்.

Tags : Petitioner , Petitioner ,control, Judicial notice,cancellation
× RELATED வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே...