×

உள்ளாட்சி தேர்தல் பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு

கோவை: ‘‘உள்ளாட்சி தேர்தலின்போது பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை வெப் கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும்’’ என மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறினார். கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வுக் கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. மாநில தலைமை தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழக மாநில  தேர்தல் ஆணையம் மூலம் வழங்கப்பட்டுள்ள கையேட்டில் மிக தெளிவாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்  பணியில் ஈடுபடும்போது எந்த ஒரு சந்தேகங்களுக்கும் இடம் அளிக்காத  வகையில் நேர்மையான முறையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி மையத்திற்கு செல்லும் சாலைகளிலும், வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்று கண்காணிக்க வேண்டும்.  பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை வெப் கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும்.  இவ்வாறு பழனிசாமி பேசினார்.



Tags : election , Local election, Tense ballots,web camera
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...