வாலிபருக்கு தையல் போட்ட துப்புரவு பணியாளர்: அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அவலம்

அறந்தாங்கி: விபத்தில் காயமடைந்த வாலிபருக்கு அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர் தையல் போட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் பெரியாளூர் மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தீபன் (38). இவர் கடந்த நேற்றுமுன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் கீரமங்கலம் சென்றுவிட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தபோது  கீரமங்கலம்  மின்வாரிய  அலுவலகம் முன் எதிரே வந்த ஒரு வாகனத்திற்கு வழிவிட திருப்பியபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.  இதில் காயமடைந்த கார்த்தீபனை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்ககாக  அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவரது தாடையில் தையல்போட ஏற்பாடு நடந்தது. ஆனால் தையல் போடுவதற்கு மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள்  வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மருத்துவமனையின் துப்புரவு பணியாளர் கோவிந்தராஜ் கார்த்தீபனுக்கு தையல் போட்டார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் கூறும்போது, மருத்துவப்பணியாளர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையால்தான் இப்படி அனுபவமுள்ள மருத்துவமனை பணியாளர்கள் தையல் போட வேண்டியுள்ளது என்றனர்.

Related Stories:

>