×

தமிழக அரசு பஸ்சில் கர்நாடக முத்திரை கொண்ட டிக்கெட் விநியோகம்

வேலூர்: தமிழக அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் பயணிகளுக்கு அச்சடிக்கப்பட்ட டிக்கெட்களை வழங்கி வந்தனர். இதையடுத்து நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் கடந்த 2010ம் ஆண்டு அரசு பஸ் கண்டக்டர்களுக்கு, டிக்ெகட் பிரின்ட் செய்து  தரும் கையடக்க டிக்ெகட் வழங்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.இந்நிலையில், தமிழக அரசு பஸ்களில் இடிஎம் இயந்திரங்களுக்கு தேவையான பேப்பர் ரோல் சரியாக தருவதில்லை. இதனால் அரசு பஸ்களில், தனியார் நிறுவனங்களின் பேப்பர் ரோல், அல்லது பிற மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா  மாநிலங்களின் முத்திரை கொண்ட பேப்பர் ரோல்களில் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் ஏற்கனவே செய்தி வெளியாகி உள்ளது. இதையடுத்து தற்காலிகமாக அரசு பஸ்களில் பேப்பர் ரோல்  வழங்கப்படுகிறது. ஆனால் மீண்டும் பேப்பர் ரோல் சரியாக வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது.

அதற்கேற்ப நேற்று திருவள்ளூர் பணிமனையில் இருந்து திருப்பதி வரை இயக்கப்பட்ட அரசு பஸ்சில், கர்நாடக அரசு போக்குவரத்துக்கழக முத்திரையுடன் கூடிய டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது பயணிகளை அதிருப்தி அடைய செய்தது. இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:  பெரும்பாலான அரசு பஸ்களில் தமிழக அரசு போக்குவரத்துக்கழக முத்திரையுடன் கூடிய டிக்கெட் விநியோகம் செய்யப்படுவதில்லை. ஆந்திர மாநிலம் நகரியில் இருந்து திருப்பதி சென்ற தமிழக அரசு  பஸ்சில் கர்நாடக அரசு போக்குவரத்துக்கழக முத்திரை கொண்ட டிக்கெட் வழங்கப்பட்டது. ஆந்திர பகுதிகளுக்கு செல்லும் தமிழக பஸ்களில் கர்நாடக அரசு போக்குவரத்துக்கழக முத்திரை கொண்ட பேப்பர் ரோல் எப்படி கிடைக்கிறது என்பது  தெரியவில்லை. தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தில் பேப்பர் ரோல்கள் தேவையான அளவு ெகாள்முதல் செய்யப்படுவதில்லையா என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும். அந்தந்த போக்குவரத்து மண்டல அதிகாரிகள் ஆய்வு செய்து  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Karnataka ,Government , Distribution , Karnataka Stamped,Tickets ,Government Bus
× RELATED கல்லாதவர்களுக்கு கற்போம் எழுதுவோம் கையேடு வழங்கல்