வீடுகளில் திருடிய சிறுவன் கைது

சென்னை: தரமணி தந்தை பெரியார் நகரில் நேற்று நிறுத்தப்பட்டு இருந்த பைக்கை திருடிக்கொண்டு தப்ப முயன்ற சிறுவனை பொதுமக்கள் மடக்கி பிடித்து தரமணி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், பைக்கை திருடுவதற்கு சற்று முன்பாக அதே பகுதியில் வீடுகளை  உடைத்து 7 சவரன் நகையை திருடியதும் தெரிந்தது. அவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

* பொழிச்சலூர், நேரு நகர், கண்ணகி தெருவை சேர்ந்த பாலாஜி மகள் புஷ்பா (14), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த புஷ்பா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* வண்ணாரப்பேட்டை மேற்கு கல்லறை சாலை எம்.பிளாக் பகுதியை சேர்ந்தவர் அருள் (67). இவர், நேற்று முன்தினம் இரவு வண்ணாரப்பேட்டை சிமின்டரி சாலையை கடந்தபோது ஆட்டோ மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

* தண்டையார்பேட்டை நேரு நகரை சேர்ந்தவர் துரை (எ) முனுசாமி (67). இவர், நேற்று காலை வீட்டில் மின் மோட்டார் சுவிட்ச் இயக்கியபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முனுசாமி வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

* மேடவாக்கம் வீரபத்திரன் நகரில் கஞ்சா விற்ற பெரும்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ் (28), டார்வின், (25) ஒட்டியம்பாக்கத்தை சேர்ந்த கவுதம்ராஜ் (24), சிறுசேரியை சேர்ந்த ஜெய்கணேஷ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (21) நேற்று முன்தினம் இரவு நண்பர் வேல்முருகன் என்பவருடன் டைடல் பார்க் நோக்கி பைக்கில் சென்றார். இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே சென்றபோது முன்னால் சென்ற கார் மீது பைக் மோதியதில் ரஞ்சித்குமார் இறந்தார்.

Tags : homes ,stealing homes , In the homes, the boy who stole, was arrested
× RELATED கண்மாயில் மூழ்கி சிறுவன் சாவு