வாலிபரை வெட்டி வழிப்பறி

அண்ணாநகர்: வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் சையது (25). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார். வில்லிவாக்கம் செங்குன்றம் சாலை வழியாக நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், சையதை மறித்து நகை, பணம், செல்போனை பறிக்க முயன்றனர். அவர் அலறி கூச்சலிட்டதால், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், சையதை கத்தியால் வெட்டி, அவர் கழுத்தில் கிடந்த 2 சவரன் செயின், பாக்கெட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.2,500 ரொக்கத்தை பறித்துக்கொண்டு தப்பினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், சையதை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags : Plaintiff, cut off, wayward
× RELATED காயமடைந்த முதியவர் சாவு