×

கொல்கத்தா - சென்னை விமானத்தில் போதைப்பொருள் கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை:  கொல்கதாவில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் கடந்த 2017ம் ஆண்டு மே 2ம் தேதி ஒருவர் போதைப் பொருள் கடத்தி வருவதாக, சென்னையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் சென்னை விமான நிலையத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு நபர், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரை அழைத்து, அவரிடம் இருந்த பையை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில், 400 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் கும்பகோணத்தை சேர்ந்த அப்துல் ஆடம் சம்சுதீன் (41) என்பது தெரியவந்தது. அவர் மீது போதைப்பொருள் கடத்திய பிரிவுகளின் கிழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு நீதிமன்றத்தில், நீதிபதி தேன்மொழி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கினார். அதில், சம்சுதீன் மீதான குற்றம் விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

வாலிபருக்கு 3 ஆண்டு சிறை:
பாரிமுனை அருகே உள்ள கிளைவ் பேட்டரி பகுதியில் சாலை ஓரத்தில் வசித்து வருபவர் தியாகராஜன் (35). இவர் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி இரவு 11.30 மணியளவில், அதே பகுதியில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து துறைமுகம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, தியகராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தியாகராஜன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Tags : Chennai ,Kolkata , Kolkata-Chennai flight, drug, kidnapping, 10 years, jail
× RELATED கொல்கத்தா விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசி விபத்து: இறக்கைகள் சேதம்