×

ஆசிரியர் பல்கலைக்கு துணைவேந்தராக பஞ்சநதம் நியமனம்

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் தங்கசாமிபதவிக்காலம் பிப்ரவரி 8ம் தேதி முடிந்தது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் முனைவர் பஞ்சநதத்தை அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்துள்ளார். அவர் பதவியேற்றது முதல் 3 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் தொடர்வார். பஞ்சநதம் அண்ணாமலை பல்கலைக்கழக தொழில் மேலாண்மை துறை பேராசிரியராக உள்ளார். 2017ல் மும்பை ஐஐடி கம்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பு சிறந்த பேராசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.


Tags : Panchanatham ,Vice-Chancellor ,Teachers University Teachers University Appointment of Panchanatham ,Vice Chancellor , Faculty University, Vice-Chancellor, Panchayat
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்