×

ஆய்வுக்கு வந்த செல்லூர்ராஜூ ஐந்தே நிமிடத்தில் திரும்பினார்

சின்னசேலம்: கச்சிராயபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு ஆய்வுக்கு வந்த அமைச்சர் செல்லூர் ராஜு 5 நிமிடத்தில் திரும்பியதால் காரணம் தெரியாமல் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் கச்சிராயபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை ஆய்வு செய்ய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வந்தார். அவருடன் அதிகாரிகள் வந்திருந்தனர்.  வங்கிக்குள் சென்ற அமைச்சரை குத்துவிளக்கு ஏற்ற அழைத்தனர்.  அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ இந்த வங்கியின் பொறுப்பாளர்களை அழைத்தார். அப்போதுதான் அதிகாரிகள் இந்த வங்கியின் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் செல்லூர் ராஜூ அங்கிருந்தவர்களிடம் வேறு எதுவும் பேசாமல் வெளியேறி காரில் சென்று விட்டார்.  இதனால் பதற்றம் அடைந்த அதிகாரிகளும், அதிமுகவினரும் அமைச்சர் செல்லூர் ராஜூ திரும்பியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அமைச்சர், வங்கியை ஆய்வு செய்ய வந்த வந்த வேகத்திலேயே திரும்பியது கட்சியினரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tags : Cellulorraju ,Selur Raju ,scene ,inspection , Selur Raju
× RELATED சினிமா காட்சி போல் வழிப்பறி ஆசாமிகளை...