×

வெங்காய விலையை கட்டுப்படுத்த வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை  விடுத்துள்ளார்.  இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:  கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ 15 முதல் 20 வரை விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை இப்போது மொத்த விற்பனை சந்தையில் 85 முதல் 95 ஆக அதிகரித்திக்கிறது. சில்லறை விற்பனைக் கடைகளில் பெரிய வெங்காயம் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சிறிய வெங்காயத்தின் விலை கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில்  கிலோ 180 வரையிலும், சில்லறை விற்பனை சந்தைகளில் 200க்கும் கூடுதலாகவும் உள்ளது. வெங்காயத்தின் விலை உயர்வால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.   
வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், தமிழக அரசும் வெங்காய கையிருப்புக்கு உச்சவரம்பை நிர்ணயித்துள்ளன.

வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய அரசு   அறிவித்திருக்கிறது. வெங்காயத்தின் தேவைக்கு இணையாக வெங்காயத்தின் வரவை அதிகரிப்பதன் மூலமாக மட்டும் தான் விலையை கட்டுப்படுத்த முடியும். வெங்காயத்தின் தேவை, வரவு இடைவெளியை குறைப்பது ஒருபுறமிருக்க, விலைக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலம் தான் விலையை குறைக்க முடியும். அரசு நியாயவிலைக் கடைகளில் மலிவு விலையில் வெங்காயத்தை விற்பனை செய்வது, வெங்காயம் இருப்பு வைப்பதற்கான உச்சவரம்பை மேலும் குறைத்து சந்தையில் அதிக  வெங்காயத்தைக் கொண்டு வருவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

காவல்துறைக்கு பாராட்டு
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு காவல்துறையின் ஆவணங்கள், ஆணைகள், கடித தொடர்புகள், கையெழுத்து உள்ளிட்ட அனைத்தும் தமிழில்தான் இருக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி ஆணையிட்டிருப்பது பாராட்டத்தக்கது. காவல்துறையில் இனி தமிழ் தழைக்கட்டும். கனிவு பெருகட்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Tags : Ramadas ,government , Onion Price, Central, State Government, Ramadas
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...