×

ஜனாதிபதி, கவர்னர் பாதுகாக்க மாட்டார்கள் என்பதால் கோர்ட்தான் ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தினர்: பாஜ மீது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை:  தமிழக காங்கிரஸ் சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த மாவட்ட தலைவர்கள் மற்றும் பிரிவு தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். மேலிட பார்வையாளர்கள் சஞ்சய் தத், வல்லபிரசாத், மூத்த தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி, தாமோதரன் முன்னிலை வகித்தனர். பிரிவு தலைவர்கள் ஜான்சி ராணி, ஹசன் ஆரூண், சபீன், அஸ்லாம் பாஷா, சந்திரசேகர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், வீரபாண்டியன், ரூபி மனோகரன் உட்பட அனைத்து மாவட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு முன்னதாக கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய ஜனநாயகத்தை ஜனாதிபதியோ, மகாராஷ்டிர மாநில கவர்னரோ பாதுகாக்க மாட்டார்கள். உச்ச நீதிமன்றம்தான் பாதுகாக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அந்த வகையில், உச்ச நீதிமன்றமும் தனது கடமையை செவ்வனே செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : president ,governor ,court ,KS Alagiri ,Baja , President, Governor, BJP, KS Alagiri
× RELATED உச்ச நீதிமன்றம் கண்டித்தபிறகும்...