×

முதியோர் தேவைகள், குறைகளை தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

* மூத்த குடிமக்களின் குறைகளை தெரிவித்து உதவிகள் பெற தொலைபேசி எண்: 044-24350375, செல் எண்: 93612 72792 ஆகிய உதவி எண்கள்அறிவிக்கப்படுகிறது.

சென்னை: முதியோர் தேவைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, சமூகநலத் துறை மூலம் மூத்த குடிமக்களுக்கு சட்ட ரீதியான  பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் செயல்படுத்தப்பட்டு அதற்கேற்ப விதிகளும் வகுக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.மேலும், முதியோர்களுக்கு தேவையான உதவிகளை பெற கட்டணமில்லா உதவி எண்ணாக சென்னைக்கு மட்டும் 1253 என்ற எண்ணும் மற்றும் சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு 1800-180-1253 என்ற எண்ணும் பொது சேவை எண்ணாக ஹெல்ப் ஏஜ் இந்தியா என்ற தொண்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர்களும் பயனடையும் நோக்கில், சென்னை உயர் நீதிமன்ற ஆணையின்படி, மூத்த குடிமக்களின் பிரச்னைகள் மற்றும் குறைகளை தெரிவித்து உதவிகள் பெற கூடுதலாக, தொலைபேசி எண்: 044-24350375, செல் எண்: 93612 72792 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்படுகிறது.முதியோர்கள் அனைத்து தேவைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க இந்த உதவி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Govt , Elderly Needs, Telephone, Government of Tamil Nadu
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ்