×

ஜெயலலிதா குறித்து சினிமா, சீரியல் எடுப்பதை எதிர்த்து சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரலாம்: ஜெ.தீபாவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம், சீரியல் எடுப்பதை எதிர்த்து சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஜெ.தீபாவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தலைவி என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் இந்தியிலும்  இயக்குநர் விஜய் திரைப்படம் எடுத்து வருகிறார். ஜெயலலிதாவாக நடிகை கங்கணா ராவத் நடிக்கும் இப்படத்தின்  பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.இதேபோல் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவை மையப்படுத்தி நடிகை ரம்யா கிருஷ்ணனை வைத்து இணையதள சீரியல் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பாக திரைப்படமோ, இணையதள சீரியலோ எடுக்கக்கூடாது எனக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து திரைப்படம் மற்றும் இணையதள சீரியல் எடுக்க தடை கோரி உரிமையியல் வழக்கு தொடரலாம் என்று நீதிபதி அனுமதியளித்ததுடன், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கப்படுகிறது என்றும்  உத்தரவிட்டார்.

Tags : Jayalalithaa ,Court ,Cinema , Jayalalithaa, Cinema, Serial, Civil Court, J. Deepa, High Court
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...