உரத்தட்டுப்பாட்டால் கடும் பாதிப்பு: அரசுக்கு ஸ்டாலின் டிவிட்டரில் கண்டனம்

சென்னை: உரத்தட்டுப்பாட்டால் தமிழக விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான  மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள். மத்திய - மாநில அரசுகள் அலட்சியப் போக்கினைக் கைவிட்டு உரத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>