×

முந்தி செல்ல முயன்றபோது லாரி மீது ஆட்டோ மோதி டிரைவர் உடல் நசுங்கி பலி: பயணி படுகாயம்

சென்னை: வடபழனி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் இளங்கோ (50), ஆட்டோ டிரைவரான இவர், நேற்று அதிகாலை வடபழனியில் இருந்து அருணாசலம் (25) என்ற பயணியை ஏற்றிக்கொண்டு நூறடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரியை ஆட்டோ டிரைவர் இளங்கோ அதிவேகமாக முந்தி செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்கத்தில் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ டிரைவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

ஆட்டோவில் பயணம் செய்த அருணாசலம் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். தகவலறிந்து பாண்டி பஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருணாசலத்தை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளங்கோ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த லாரி டிரைவர் தீனதயாளன் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Auto collision driver crashes ,Passenger , Truck, auto, collision, driver, body crushed, killed
× RELATED ரோட்டில் கவிழ்ந்த லாரி