×

'மகா விகாஸ் அகாதி'கூட்டத்தில் மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே தேர்வு: மும்பை சிவாஜி பூங்காவில் டிச.1-ம் தேதி பதிவியேற்பு

மும்பை: சத்ரபதி சிவாஜி மகாராஜ் கனவு கண்ட மகாராஷ்டிராவை இந்த மகாராஷ்டிராவை மீண்டும் உருவாக்குவோம் என சிவசேனா தலைவரும், மகா விகாஸ் அகாதி முதல்வர் வேட்பாளருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.  மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகள் உத்தவ் தாக்கரேவே முதலமைச்சராக இருப்பார் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் - அஜித் பவார் இணைந்து ஆட்சியமைத்ததற்கு எதிராக சிவசேனா -   தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கு விசாரணையில் தங்களுக்கே பெரும்பான்மை இருப்பதாக இருதரப்பும் வாதிட்டனர்.

ஆனால், பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க 14  நாட்கள் ஆளுநர் அவகாசம் அளித்துள்ளதால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டது. ஆனால், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த  வேண்டும் என்று சிவசேனா உள்ளிட்ட மூன்று கட்சிகளும் ஒன்றாக கோரிக்கை விடுத்தன. இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிமன்றம், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை  வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.  வாக்குச்சீட்டு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், இன்று மாலைக்குள் தற்காலிக சபாநாயகரை தேர்வு  செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் மூலமாக நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார். அதேபோல, உச்சநீதிமன்றம்   விதித்த கெடுவுக்கு 24 மணி நேரம் முன்னதாகவே முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார்.

இந்நிலையில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய மூன்று கட்களின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க எம்.எல்.ஏ.க்கள்  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கூட்டணியின் தலைவராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூட்டணி சார்பில் ஒருங்கிணைப்புக் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே கூட்டணியின்  தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர், ஆளுநரை சந்தித்து இன்று ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார். தொடர்ந்து, டிசம்பர் 1-ம் தேதி மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெறும் நிகழச்சியில் மகாராஷ்டிரா முதல்வராக  பதவியேற்கவுள்ளார்.

உத்தவ் தாக்கரே பேச்சு:

கூட்டத்தில் பேசிய சிவசேனா தலைவரும், மகா விகாஸ் அகாதி முதல்வர் வேட்பாளருமான உத்தவ் தாக்கரே, நான் ஒருபோதும் மாநிலத்தை வழிநடத்துவேன் என்று கனவு கண்டதில்லை. சோனியா காந்தி மற்றும் பிறருக்கு நன்றி தெரிவிக்க  விரும்புகிறேன் என்றார். ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைத்து நாட்டுக்கு ஒரு புதிய திசையை வழங்குகிறோம். தேவேந்திர ஃபட்னாவிஸ் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் தயாராக இருக்கிறேன். நான் எதற்கும்  பயப்படவில்லை. பொய்கள் இந்துத்துவத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றார்.

தேவைப்படும்போது நீங்கள் எங்களை கட்டிப்பிடிப்பீர்கள், தேவைப்படாதபோது எங்களை விட்டு விடுங்கள். எங்களை ஒதுக்கி வைக்க முயற்சித்தீர்கள் என்றார். நீங்கள் அனைவரும் கொடுத்த பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் தனியாக  இல்லை ஆனால் நீங்கள் அனைவரும் என்னுடன் முதல்வர். இன்று நடந்தது உண்மையான ஜனநாயகம். ஒன்றாக நாங்கள் மாநில விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்போம். சத்ரபதி சிவாஜி மகாராஜ் கனவு கண்ட மகாராஷ்டிராவை இந்த  மகாராஷ்டிராவை மீண்டும் உருவாக்குவோம் என்றும் தெரிவித்தார்.



Tags : Maharashtra ,Chief Minister ,Uttav Thackeray ,meeting ,Shivaji Park ,Mumbai ,Maha Vikas Agathi , Uttav Thackeray elected Maharashtra Chief Minister at 'Maha Vikas Agathi' meeting: Registrations at Shivaji Park, Mumbai
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கு;...