×

மூலவைகை ஆற்றின் ஓரம் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்: வருசநாடு மக்கள் கோரிக்கை

வருசநாடு: வருசநாடு மூல வைகை ஆற்றங்கரையோரம் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை - மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு கிராமத்தில் மூலவைகை ஆற்றங்கரை ஓரம்  பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் மூல வைகை ஆற்றங்கரை பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதில் வருசநாடு மூல வைகை ஆற்றங்கரையோரம் கட்டப்பட்ட தடுப்புச்சுவர் சேதமடைந்தது. வெள்ளச்சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து வருசநாட்டை சேர்ந்த லட்சுமணன் கூறுகையில்,`` கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்து மூல வைகை ஆற்றில்  வெள்ளம் பெருக்கெடுத்தது. அப்போது காட்டாற்று வெள்ளநீர் வருசநாடு பெருமாள் கோயில், ஓம்சக்தி கோயில்  குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் மேட்டுப் பகுதியான இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்‌. இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் வெள்ளத்தால் பல உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மூலவைகை ஆற்றங்கரையோரம் தடுப்புச்சுவர் கட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

Tags : boundary ,Moosa River , Vaigai, Blockchain, Varunasanad people, demand
× RELATED கவரப்பேட்டை அருகே வாகன திருட்டில்...