×

அண்டார்டிகாவில் நீருக்கடியில் ரோவரை பரிசோதிக்கும் நாசா!

வியாழனின் பகுதியளவு உறைந்த நிலவான யூரோபாவிலும் அதற்கு அப்பாலும் உயிரினங்களை தேட உதவும் என்று நம்பும் ஒரு புதிய நீருக்கடியில் இயங்கும் ரோவர் ஒன்றை அண்டார்டிகாவில் உள்ள நாசா விஞ்ஞானிகள் இன்று பரிசோதனை செய்துகாண்பித்தனர். கடலடி ஆய்விற்கான மிதவை ரோவர் (Buoyant Rover for Under-Ice Exploration - BRUIE) என்று அழைக்கப்படும் இது, அண்டார்டிக்காவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கேஸு ஆராய்ச்சி நிலையத்தின் மேற்பரப்பிற்கு கீழே சோதனை செய்யப்படுகிறது.  கடலின் கீழ் ஆழத்திற்கு செல்வதை விட, பனி கடலில் நீருக்குள் செல்ல தண்ணீரின் மிதவை அதை நிலையாக வைத்திருக்கவும், இயக்கும் ஆற்றல் செலவை குறைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாதிரிகளை சேகரிக்கும் போது அல்லது நிலையான இருக்கும் போது மின்சாரம் வழங்கக்கூடிய ஆற்றல் அமைப்பை அணைத்துவைக்கும் ஆற்றல் சேமிப்பு அம்சத்தையும் இது கொண்டுள்ளது.  குறிப்பாக தேடல் பகுதிகள் எனப்படும் இடைமுகங்கள் அல்லது பனி மற்றும் நீர் சந்திப்பு பகுதிகளில் இந்த ரோவரை பயன்படுத்த நாசா விஞ்ஞானிகள் ஆர்வமாக உள்ளனர். இந்த தொலைதூர கடல்களை சூழ்ந்து கொண்டிருக்கும் இந்த பனிக்கட்டிகள் கீழே கடலுக்கு ஒரு சாளரமாக பணியாற்றுகின்றன மற்றும் இந்த பனிக்கட்டிகளின் வேதியியல் மூலம் கடலில் வாழும் உயிரினங்களுக்கு உணவூட்டும் உதவ முடியும்என்று நாசாவின் கெவின் ஹேண்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.  

பூமியில் நமது துருவ கடல்களை சூழ்ந்து கொண்டிருக்கும் பனிக்கட்டிகளும் இதுபோன்ற பணியையே செய்கிறது. மேலும் எங்கள் குழு பனிக்கட்டி தண்ணீரை சந்திக்கும் இடத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய மிகவும் ஆர்வமாக இருக்கிறது. என்கிறார். அண்டார்டிகாவின் பனிக்கட்டி அதன் தடிமனான பகுதியில் மூன்று மைல்கள் தடிமன் உள்ள நிலையில், வியாழனின் யூரோபாவில் பனிக்கட்டியின் தடிமன் ஆறு முதல் பன்னிரண்டு மைல் தடிமன் என்ற அளவில் உள்ளது.  

இந்த ரோவரின் நீண்ட கால இலக்கு என்பது, ஆற்றலை இழக்காமல் மாதங்களுக்கு தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்பதே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் தற்போதைய வடிவமைப்பில் உள்ள இரண்டு கேமராக்கள் மற்றும் ஆய்வுகருவிகள் தண்ணீர் வெப்பநிலை, உப்புத்தன்மை, மற்றும் ஆக்ஸிஜன் அளவை அளவிட அனுமதிக்கும்.  இந்த அளவீடுகள் தான் பூமியில் உயிரினங்கள் வளருவதற்கான அடிப்படையாக இருந்தது. ஆனால் நாசாவின் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கருவிகளைத் இந்த கருவிகளை மாற்ற வாய்ப்புள்ள எனவும், ஏனெனில் மற்ற கிரகங்களில் உயிரினங்களின் வாழ்க்கை வெவ்வேறு நிலைமைகளை உள்ளடக்கியதாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.  

வியாழன் கிரகத்திற்கான நாசாவின் அடுத்த முக்கிய மிஷன் 2025 க்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அப்போது அந்த கிரகத்திலிருந்தும் ,அதனை சுற்றிவரும் பல நிலவுகளில் இருந்தும் பல்வேறு அளவீடுகள் மற்றும் புகைப்படங்களை எடுக்கும் இலக்குடன் யூரோபா கிளிப்பர் ஏவப்படவுள்ளது.



Tags : NASA ,Antarctica , Thursday, NASA, Antarctica, Europe, Rover
× RELATED வானிலை நிலவரங்களை துல்லியமாக...