×

வெங்காய விலை உயர்வு காரணமாக தமிழத்தில் பெரும்பாலான உணவகங்களில் ஆம்லெட் விற்பனை நிறுத்தம்: பிரியாணி விலையும் உயர்வு

சேலம்: வெங்காய விலை உயர்வு காரணமாக தமிழத்தில் பல மாவட்டங்களில் உள்ள சிறிய சிறிய உணவகங்களில் ஆம்லெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் உணவக உரிமையாளர்களும் கடும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர். சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 120 ரூபாயும், சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வின் காரணமாக பெரும்பாலான உணவகங்களில் ஆம்லெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வெங்காயம் பயன்படுத்தி தயாரிக்கும் தோசை உள்ளிட்ட உணவு பொருட்களின் வகைகளின் விற்பனையும் குறைக்கப்பட்டு வருகிறது. குறைவான வெங்காயம் பயன்படுத்துவதால் உணவின் சுவை குறைகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறைகிறது. இதனால் விற்பனை பெரிதும் பாதிக்கப்படுகிறது என கடை உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேடு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய காய்கறிச் சந்தைகளுக்கு வெங்காயவரத்து சரிந்துள்ளது. வெங்காயம் கிடைப்பதில் பெரும் சிக்கல் இருப்பதால், ஹோட்டல்களில் உணவு சமைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.   

பிரியாணி விலை உயர்வு


பிரியாணி தயாரிப்பில் வெங்காயம் அவசியம் என்பதால், பிரியாணி கடைக்காரர்கள் தவித்துப் போயுள்ளனர். இந்த பாதிப்புகள் பிரியாணியின் விலையில் எதிரொலித்துள்ளது. பிரியாணியின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளார்கள் கடைக்காரர்கள். சென்னையில் நடுத்தர உணவகங்களில் தற்போது கோழிக்கறி பிரியாணியின் விலை 200 ரூபாயாகவும், மட்டன் பிரியாணியின் விலை 250 ரூபாயாகவும் உள்ளது.

Tags : restaurants , Onion Price, Omelette, Sale, Parking, Biryani
× RELATED மதுரையில் 17 நாளில் 200 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்..!!