மராட்டிய மக்கள் பாஜக கூட்டணி ஆட்சிக்கு தான் வாக்களித்தனர்: தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி

மகாராஷ்ட்டிரா:  மராட்டிய மக்கள் பாஜக கூட்டணி ஆட்சிக்கு தான் வாக்களித்தனர் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். சிவசேனாவை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. திடீரென சிவசேனா முதல்வர் பதவி கேட்டு பேரம் பேசியது. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தர சிவசேனாவுக்கு வாக்குறுதி அளிக்கவில்லை. பாஜகவுடன் பேரம் பேசிக்கொண்டே மற்ற கட்சிகளுடன் சிவசேனா பேச்சு நடத்தியது எனவும் கூறியுள்ளார்.

Related Stories:

>