×

அல்பேனியா நாட்டில் அதிகாலை 4 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.4 ஆக பதிவு

டிரானா: அல்பேனியா நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது குறித்த சேதம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அல்பேனியாவை உள்ளூர் நேரம் அதிகாலை 4 மணிக்கு 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதாக கூறப்படுகிறது. தலைநகர் டிரானாவில் வீடுகளில் இருந்த மக்கள் தெருக்களில் குவிந்தனர். அல்பேனியாவின் ஷிஜாக்கிலிருந்து வடமேற்கில் 10 கி.மீ (6 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் அல்பேனியாவில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த  நிலநடுக்கம் இது என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கிறது.

கடந்த செப்டம்பர் 21 அன்று 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அல்பேனியாவை தாக்கியது. இதில் சுமார் 500 வீடுகள் சேதமடைந்தது. தலைநகர் டிரனா மற்றும் கடற்கரை நகரமான டுர்ரஸ் ஆகிய இடங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் செப்டம்பர் மாதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 68 பேர் படுகாயம் அடைந்தனர். அல்பேனியா நாட்டின் வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளில் நேரிட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் அதுவும் ஒன்றாகும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.


Tags : earthquake ,Albania , Powerful,earthquake,hits,Albania,riktar 6.4
× RELATED வேளாண் மாணவர்கள் பார்வையிட்டனர் உலக...